• Aug 04 2025

பாகிஸ்தான் - அயர்லாந்து கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு!

shanuja / Aug 4th 2025, 10:16 am
image

பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 

முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. 

 

அயர்லாந்து அணியின் முதலாவது பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணமாக இருந்த இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - அயர்லாந்து கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.  அயர்லாந்து அணியின் முதலாவது பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணமாக இருந்த இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement