• Jul 03 2025

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மு. சிவசிதம்பரத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு..!

shanuja / Jun 5th 2025, 5:11 pm
image


பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரதி சபா நாயகருமான மு. சிவசிதம்பரத்தின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில்,  நெல்லியடி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த இராகவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

இதே வேளை கரவெட்டி கிழக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மு. சிவசிதம்பரத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு. பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரதி சபா நாயகருமான மு. சிவசிதம்பரத்தின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில்,  நெல்லியடி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த இராகவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதே வேளை கரவெட்டி கிழக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now