• Jul 16 2025

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இடை நிறுத்தம்

Chithra / Jul 16th 2025, 9:20 am
image


தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியிட்டுள்ள கடிதத்திலே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முகாமைத்துவ குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய பேருவளை நகரசபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின்போது செயற்படாத காரணத்தினால் பேருவளை நகர சபையின் உறுப்பினர்களான எம்.முஸ்பிர், எம்.எப்,எம். இஷாம், எம்.மஸாஹிம், டி, விமலசிறி சில்வா, எம்.என்.எம்.இர்ஷாத், எம்.ஆர்.எப். ரிஹானா ஆகியோரின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இடை நிறுத்தம் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியிட்டுள்ள கடிதத்திலே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதில்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முகாமைத்துவ குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய பேருவளை நகரசபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின்போது செயற்படாத காரணத்தினால் பேருவளை நகர சபையின் உறுப்பினர்களான எம்.முஸ்பிர், எம்.எப்,எம். இஷாம், எம்.மஸாஹிம், டி, விமலசிறி சில்வா, எம்.என்.எம்.இர்ஷாத், எம்.ஆர்.எப். ரிஹானா ஆகியோரின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement