இந்தோனேஷிய இறக்குமதிகள் மீதான திட்டமிடப்பட்ட வரிகளை 32 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இந்தோனேஷியாவின் வரிகளை அமெரிக்கா குறைத்துள்ளது.
அதற்கு ஈடாக, இந்தோனேஷிய சந்தைகளில் சுங்கவரி மற்றும் சுங்கவரி இல்லாத தடையற்ற அணுகலை அமெரிக்கா பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தோனேஷியா இது குறித்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்களை இன்னும் வெளியிடவில்லை.
முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் புதுப்பிக்கப்பட்ட கட்டண அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷிய இறக்குமதி வரிகளைக் குறைத்த அமெரிக்கா இந்தோனேஷிய இறக்குமதிகள் மீதான திட்டமிடப்பட்ட வரிகளை 32 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இந்தோனேஷியாவின் வரிகளை அமெரிக்கா குறைத்துள்ளது. அதற்கு ஈடாக, இந்தோனேஷிய சந்தைகளில் சுங்கவரி மற்றும் சுங்கவரி இல்லாத தடையற்ற அணுகலை அமெரிக்கா பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தோனேஷியா இது குறித்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்களை இன்னும் வெளியிடவில்லை. முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் புதுப்பிக்கப்பட்ட கட்டண அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.