• Jul 19 2025

பேஸ்புக்கில் காதல் - காதலனுடன் சென்ற மாணவி அப்புத்தளையில் மீட்பு காதலன் கைது!

shanuja / Jul 18th 2025, 6:54 pm
image

பேஸ்புக் மூலம் காதலித்த மாணவி ஒருவர் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்புத்தளையில் நேற்று (17) மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பேஸ்புக்கில் காதல் வயப்பட்டுள்ளார்.


மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அவர் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். மகளைக் காணவில்லை என்று தந்தை லிந்துலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 


 முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மாணவியின் இருப்பிடத்தை  கண்டுபிடித்து  அங்கு சென்றனர். 15 வயதுடைய பாடசாலை மாணவியை அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் வைத்திருந்த  நிலையில் மாணவியை மீட்டதுடன் காதலனான இளைஞனையும் கைது செய்துள்ளனர்.


குறித்த மாணவி பேஸ்புக் மூலம் இளைஞன் ஒருவருடன்  காதல் வயப்பட்டுள்ளார். அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியேறி  நானுஓயாவில் இளைஞனை சந்தித்து அவருடன் அப்புத்தளைக்கு ரயிலில் சென்றதாக  பொலிஸாரின் விசாரணையில் மாணவி  தெரிவித்துள்ளார்.


மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று லிந்துலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் காதல் - காதலனுடன் சென்ற மாணவி அப்புத்தளையில் மீட்பு காதலன் கைது பேஸ்புக் மூலம் காதலித்த மாணவி ஒருவர் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்புத்தளையில் நேற்று (17) மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பேஸ்புக்கில் காதல் வயப்பட்டுள்ளார்.மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அவர் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். மகளைக் காணவில்லை என்று தந்தை லிந்துலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மாணவியின் இருப்பிடத்தை  கண்டுபிடித்து  அங்கு சென்றனர். 15 வயதுடைய பாடசாலை மாணவியை அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் வைத்திருந்த  நிலையில் மாணவியை மீட்டதுடன் காதலனான இளைஞனையும் கைது செய்துள்ளனர்.குறித்த மாணவி பேஸ்புக் மூலம் இளைஞன் ஒருவருடன்  காதல் வயப்பட்டுள்ளார். அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியேறி  நானுஓயாவில் இளைஞனை சந்தித்து அவருடன் அப்புத்தளைக்கு ரயிலில் சென்றதாக  பொலிஸாரின் விசாரணையில் மாணவி  தெரிவித்துள்ளார்.மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று லிந்துலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement