முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு தொடர்பான சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது நிதியை தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரணிலின் வழக்கு தொடர்பில் சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு தொடர்பான சட்டநடவடிக்கைகள் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொது நிதியை தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.