• Aug 26 2025

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

Chithra / Aug 26th 2025, 3:13 pm
image

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. 

வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​சந்தேக நபர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. 

இன்று வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பாக மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்னிலையானார்.

சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி வருகின்றனர்.

இந்நிலையில் ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அழைப்புப் பத்திரத்தின் சட்டப்பூர்வ தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுபொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​சந்தேக நபர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இன்று வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பாக மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்னிலையானார்.சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி வருகின்றனர்.இந்நிலையில் ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.இதற்கிடையில், அழைப்புப் பத்திரத்தின் சட்டப்பூர்வ தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement