சட்டவிரோத மணல் அகழ்வுப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவலறிந்த கடத்தல் கும்பல், சட்டவிரோதமாக அகழ்ந்த மண்ணை வீதியில் பறித்துவிட்டு தப்பியோடியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மற்றும் பச்சிளைப்பள்ளி மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக காணப்படும் மருதங்கேணி புதுக்காட்டு பிதான வீதி ஊடாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.
கடந்த சில காலங்களாக சட்ட விரோத மண் அகழ்வு அதிகரித்து காணப்படுகிறது. மண் கடத்தல் கும்பல்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்த பிரதான பாதையினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக வீதியோரம் மணல் அதிகளவாக பரவி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையைப் பயன்படுத்தி மணற் கடத்தல்காரர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டனர்.
இதனை அவதானித்த பிரதேச மக்கள் இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினரிற்கு அறிவித்துள்ளனர்.
தகவலையடுத்து மருதங்கேணி புதுக்காட்டு பகுதியை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர்.
அதனையறிந்த மணற்கடத்தல் கும்பல்கள், ஏற்றி சென்ற அனுமதி அற்ற மண்ணை வீதியோரங்களில் பறித்து விட்டு சென்றுள்ளனர்.
இதனால் இன்று காலை சுமார் 3 டிப்பர்களுக்கு அதிகமான மண்கள் வீதியோரங்களில் பரவி காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இன்று சிறு விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வீதியோரங்களில் காணப்படும் மண்ணை அகற்றும் பணிகளை கிளிநொச்சி வீதி அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு- முற்றுகையிட்ட பொலிஸார்; வீதியில் மண்ணைப் பறித்து தப்பியோடிய கும்பல் சட்டவிரோத மணல் அகழ்வுப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவலறிந்த கடத்தல் கும்பல், சட்டவிரோதமாக அகழ்ந்த மண்ணை வீதியில் பறித்துவிட்டு தப்பியோடியுள்ளது. வடமராட்சி கிழக்கு மற்றும் பச்சிளைப்பள்ளி மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக காணப்படும் மருதங்கேணி புதுக்காட்டு பிதான வீதி ஊடாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. கடந்த சில காலங்களாக சட்ட விரோத மண் அகழ்வு அதிகரித்து காணப்படுகிறது. மண் கடத்தல் கும்பல்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்த பிரதான பாதையினையே பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் கடந்த சில நாட்களாக வீதியோரம் மணல் அதிகளவாக பரவி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையைப் பயன்படுத்தி மணற் கடத்தல்காரர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டனர். இதனை அவதானித்த பிரதேச மக்கள் இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினரிற்கு அறிவித்துள்ளனர்.தகவலையடுத்து மருதங்கேணி புதுக்காட்டு பகுதியை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர். அதனையறிந்த மணற்கடத்தல் கும்பல்கள், ஏற்றி சென்ற அனுமதி அற்ற மண்ணை வீதியோரங்களில் பறித்து விட்டு சென்றுள்ளனர்.இதனால் இன்று காலை சுமார் 3 டிப்பர்களுக்கு அதிகமான மண்கள் வீதியோரங்களில் பரவி காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இன்று சிறு விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வீதியோரங்களில் காணப்படும் மண்ணை அகற்றும் பணிகளை கிளிநொச்சி வீதி அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.