இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபா அபராதமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 13 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துமீறி மீன்பிடி:இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபா அபராதமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 13 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.