• Feb 05 2026

சிறுமியைதுஷ்பிரயோகம் செய்த கொடூரன்; கல்முனை மேல் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

Chithra / Feb 3rd 2026, 6:49 pm
image

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில்  இன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமியைதுஷ்பிரயோகம் செய்த கொடூரன்; கல்முனை மேல் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில்  இன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement