• Apr 22 2026

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வின்றேல் கோட்டாவின் நிலைமையே ஜனாதிபதிக்கு ஏற்படும்! சம்பிக்க எச்சரிக்கை

Chithra / Feb 23rd 2026, 10:24 am
image

 எரிவாயு பிரச்சினைக்கு அரசாங்கள் உடன் தீர்வு காண வேண்டும். இல்லையேல் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என ஐக்கிய குடியரசு முன்னணணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்தார். 


கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய நிறுவனத்துக்கு எரிவாயு விநியோகத்துக்கான விலைமனு வழங்கப்பட்டது.


2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட எரிவாயு விநியோக தட்டுப்பாட்டுடன்,எரிவாயு சிலிண்டர்களும் வெடித்தன.பலர் உயிரிழந்தார்கள், பலர் காயமடைந்தார்கள். இந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த அரசாங்கமும் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.


இந்த அரசாங்கம் எரிவாயு விநியோகத்துக்கான பொறுப்பை பிரித்தானிய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. குறைவான விலைக்கு எரிவாயு கொள்வனவுக்கு விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்  எரிவாயு விநியோகத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தான் எரிவாயு விநியோகத்தில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் இல்லையேல் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும்.


அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. ஏனைய மதங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அருட்தந்தையை தாக்கிய பொலிஸார் பதவி நீக்கப்பட்டார்கள்.ஆனால் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பௌத்த பிக்குகளை தாக்கிய பொலிஸாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும்  எடுக்கப்படவில்லை.


ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மத கொள்கையற்ற வகையில் செயற்படுகிறார்கள். இதனால் இவர்கள் பௌத்த மதத்தின் கொள்கைகளுக்கு முன்னுரிமையளிப்பதில்லை. இது முற்றிலும் தவறானது என்றார்.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வின்றேல் கோட்டாவின் நிலைமையே ஜனாதிபதிக்கு ஏற்படும் சம்பிக்க எச்சரிக்கை  எரிவாயு பிரச்சினைக்கு அரசாங்கள் உடன் தீர்வு காண வேண்டும். இல்லையேல் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என ஐக்கிய குடியரசு முன்னணணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய நிறுவனத்துக்கு எரிவாயு விநியோகத்துக்கான விலைமனு வழங்கப்பட்டது.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட எரிவாயு விநியோக தட்டுப்பாட்டுடன்,எரிவாயு சிலிண்டர்களும் வெடித்தன.பலர் உயிரிழந்தார்கள், பலர் காயமடைந்தார்கள். இந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த அரசாங்கமும் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.இந்த அரசாங்கம் எரிவாயு விநியோகத்துக்கான பொறுப்பை பிரித்தானிய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. குறைவான விலைக்கு எரிவாயு கொள்வனவுக்கு விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்  எரிவாயு விநியோகத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தான் எரிவாயு விநியோகத்தில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் இல்லையேல் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும்.அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. ஏனைய மதங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அருட்தந்தையை தாக்கிய பொலிஸார் பதவி நீக்கப்பட்டார்கள்.ஆனால் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பௌத்த பிக்குகளை தாக்கிய பொலிஸாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும்  எடுக்கப்படவில்லை.ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மத கொள்கையற்ற வகையில் செயற்படுகிறார்கள். இதனால் இவர்கள் பௌத்த மதத்தின் கொள்கைகளுக்கு முன்னுரிமையளிப்பதில்லை. இது முற்றிலும் தவறானது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement