• Apr 22 2026

நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டம் எம்.பி.க்களின் 40 வருட ஓய்வூதியத்திற்கு சமம் - புபுது ஜயகொட

Chithra / Feb 23rd 2026, 10:27 am
image


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது எனத் தெரியவந்துள்ள நிலையில், இதனால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி இழப்பு குறித்து முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒரு தனியார் நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 8 கப்பல் நிலக்கரிகளும் தரமற்றவை என இலங்கை மின்சார சபையின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.


குறிப்பாக, 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று கப்பல்களில் வந்த நிலக்கரி தரம் குறைந்தது என்று தெரியவந்திருந்த போதிலும் அந்த நிறுவனத்துடனான கொள்முதல் ஒப்பந்தம் இதுவரை ரத்துச் செய்யப்படவில்லை.


தரமற்ற நிலக்கரி எனத் தெரிந்தும் ஆய்வக அறிக்கைகளை மக்களுக்கு மறைத்து, இவ்வாறான ஊழல்களை முன்னெடுப்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பாரியளவில் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.


உலக சந்தையில் ஒரு மெற்றிக் டன் நிலக்கரியை 70 டொலர்களுக்குப் பெற முடியும் நிலையில், அரசாங்கம் அதனை 98.50 டொலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளது.இந்த மேலதிக பணம் யாருடைய பைகளுக்குச் சென்றது என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.


மேலும், இந்த முறைகேடான கொள்முதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவித்து இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.


இந்த நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டம் சுமார் 7,672.1 மில்லியன் ரூபா (767 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நஷ்டமானது, இந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 40 வருடங்கள் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகைக்கு சமமானதாகும்.


எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது மாத்திரம் அரசியல் கலாசார மாற்றம் அல்ல தற்போது 40 வருடங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்துக்கு சமமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டம் எம்.பி.க்களின் 40 வருட ஓய்வூதியத்திற்கு சமம் - புபுது ஜயகொட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது எனத் தெரியவந்துள்ள நிலையில், இதனால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி இழப்பு குறித்து முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒரு தனியார் நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 8 கப்பல் நிலக்கரிகளும் தரமற்றவை என இலங்கை மின்சார சபையின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.குறிப்பாக, 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று கப்பல்களில் வந்த நிலக்கரி தரம் குறைந்தது என்று தெரியவந்திருந்த போதிலும் அந்த நிறுவனத்துடனான கொள்முதல் ஒப்பந்தம் இதுவரை ரத்துச் செய்யப்படவில்லை.தரமற்ற நிலக்கரி எனத் தெரிந்தும் ஆய்வக அறிக்கைகளை மக்களுக்கு மறைத்து, இவ்வாறான ஊழல்களை முன்னெடுப்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பாரியளவில் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.உலக சந்தையில் ஒரு மெற்றிக் டன் நிலக்கரியை 70 டொலர்களுக்குப் பெற முடியும் நிலையில், அரசாங்கம் அதனை 98.50 டொலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளது.இந்த மேலதிக பணம் யாருடைய பைகளுக்குச் சென்றது என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.மேலும், இந்த முறைகேடான கொள்முதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவித்து இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.இந்த நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டம் சுமார் 7,672.1 மில்லியன் ரூபா (767 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நஷ்டமானது, இந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 40 வருடங்கள் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகைக்கு சமமானதாகும்.எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது மாத்திரம் அரசியல் கலாசார மாற்றம் அல்ல தற்போது 40 வருடங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்துக்கு சமமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement