ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
ஜூலை 2021க்குப் பின்னர் முதல் முறையாக ஐசிசி ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வதோதராவில் நியூசிலாந்துக்கு எதிராக 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த சிறப்பான இன்னிங்ஸின் மூலம், அவர் சக வீரர் ரோஹித் சர்மாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறினார். இது கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 11-வது முறையாக ஒருநாள் பேட்டிங் தரவரிசை நம்பர் 1 இடம் ஆகும்.
கடந்த நவம்பர்–டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கோலி 135, 102, 65 ரன்கள் எடுத்திருந்தார்.
அத்துடன் அக்டோபரில் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்கள் எடுத்ததும் அவரது தரவரிசை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
முன்னாள் இந்திய கேப்டன் முதன்முதலில் அக்டோபர் 2013ல் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்.
இப்போது மொத்தம் 825 நாட்கள் நம்பர் 1 இடத்தில் செலவிட்டுள்ளார். இது ஒரு இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்சமாகும்.
எல்லா கால பட்டியலில் அவர் 10-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 2,306 நாட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
நியூசிலாந்தின் டேரில் மிட்செல், 84 ரன்கள் எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மாவை முந்தியுள்ளார்.
முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு இடையே வெறும் 10 புள்ளிகள் மட்டுமே உள்ளதால், வரும் நாட்களில் முதலிடத்திற்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்களில் கே.எல். ராகுல் – 11-வது இடம் (ஒரு இடம் முன்னேற்றம்),முகமது சிராஜ் – 15-வது இடம் (5 இடங்கள் முன்னேற்றம்) மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் டெவோன் கான்வே – 29-வது இடம் ,கைல் ஜேமிசன் – 69-வது இடம் (27 இடங்கள் முன்னேற்றம்) என முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், கடைசி ஆஷஸ் டெஸ்டில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.
சிட்னியில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முடித்து தனது தரவரிசையை உறுதிப்படுத்தினார். ஹாரி புரூக் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஜேக்கப் பெத்தேல் 154 ரன்கள் எடுத்ததன் மூலம் 25 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தை பிடித்தார்.
தொடரின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், 31 விக்கெட்டுகளுடன் ஒன்பதாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்
ஸ்காட் போலண்ட் 20 விக்கெட்டுகளுடன் ஏழாவது இடத்தை தக்க வைத்தார்.
ஜோஷ் டங் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி 21-வது இடத்திற்கு முன்னேறினார்.
ஐசிசி ஆண்கள் டி20 தரவரிசையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களில் சாஹிப்சாதா ஃபர்ஹான் – 5-வது இடம்,சல்மான் ஆகா – 41-வது இடம்,சல்மான் மிர்சா – 19-வது இடம் என குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஐசிசியின் புதிய தரவரிசை வெளியீடு ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.ஜூலை 2021க்குப் பின்னர் முதல் முறையாக ஐசிசி ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை வதோதராவில் நியூசிலாந்துக்கு எதிராக 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த சிறப்பான இன்னிங்ஸின் மூலம், அவர் சக வீரர் ரோஹித் சர்மாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறினார். இது கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 11-வது முறையாக ஒருநாள் பேட்டிங் தரவரிசை நம்பர் 1 இடம் ஆகும்.கடந்த நவம்பர்–டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கோலி 135, 102, 65 ரன்கள் எடுத்திருந்தார்.அத்துடன் அக்டோபரில் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்கள் எடுத்ததும் அவரது தரவரிசை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.முன்னாள் இந்திய கேப்டன் முதன்முதலில் அக்டோபர் 2013ல் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இப்போது மொத்தம் 825 நாட்கள் நம்பர் 1 இடத்தில் செலவிட்டுள்ளார். இது ஒரு இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்சமாகும். எல்லா கால பட்டியலில் அவர் 10-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 2,306 நாட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.நியூசிலாந்தின் டேரில் மிட்செல், 84 ரன்கள் எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மாவை முந்தியுள்ளார். முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு இடையே வெறும் 10 புள்ளிகள் மட்டுமே உள்ளதால், வரும் நாட்களில் முதலிடத்திற்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய வீரர்களில் கே.எல். ராகுல் – 11-வது இடம் (ஒரு இடம் முன்னேற்றம்),முகமது சிராஜ் – 15-வது இடம் (5 இடங்கள் முன்னேற்றம்) மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் டெவோன் கான்வே – 29-வது இடம் ,கைல் ஜேமிசன் – 69-வது இடம் (27 இடங்கள் முன்னேற்றம்) என முன்னேற்றம் கண்டுள்ளனர்.ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், கடைசி ஆஷஸ் டெஸ்டில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.சிட்னியில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முடித்து தனது தரவரிசையை உறுதிப்படுத்தினார். ஹாரி புரூக் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஜேக்கப் பெத்தேல் 154 ரன்கள் எடுத்ததன் மூலம் 25 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தை பிடித்தார்.தொடரின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், 31 விக்கெட்டுகளுடன் ஒன்பதாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்ஸ்காட் போலண்ட் 20 விக்கெட்டுகளுடன் ஏழாவது இடத்தை தக்க வைத்தார்.ஜோஷ் டங் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி 21-வது இடத்திற்கு முன்னேறினார்.ஐசிசி ஆண்கள் டி20 தரவரிசையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.பாகிஸ்தான் வீரர்களில் சாஹிப்சாதா ஃபர்ஹான் – 5-வது இடம்,சல்மான் ஆகா – 41-வது இடம்,சல்மான் மிர்சா – 19-வது இடம் என குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.