• Jan 16 2026

ஸ்பெயினின் முதல் இளம் ராணியான இளவரசி லியோனோர் !

dileesiya / Jan 14th 2026, 2:29 pm
image

ஸ்பெயினின் வரலாற்றில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக, 20 வயது இளவரசி லியோனோர்  நாட்டின் ராணியாக பொறுப்பேற்க உள்ளார். 


1800களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவிற்குப் பிறகு, நாட்டின் முதல் ஆளும் இராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


லியோனோர், தனது உயர் கல்வியை வேல்ஸில் உள்ள UWC அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலைப் பட்டயப் படிப்பைத் தொடங்கினார்.


அதன் பிறகு நாட்டின் வருங்காலத் தலைமைத் தளபதியாக தனது இராணுவப் பயிற்சியைத் தொடங்கினார்.   


இளவரசி லியோனர், ராணியாக மாறுவதற்காக முப்படைகளிலும் பயிற்சி பெற்றுள்ளார்.


கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் இராயுவ பயிற்சி போன்ற கடுமையான பாதுகாப்பு மற்றும் இராணுவத் திட்டங்களில் பயிற்சி பெற்றுள்ளார். 


லியோனர் இப்பொழுது ஸ்பெயினின் ஆயுதப் படைகளின் எதிர்காலத் தளபதியாகவும், நாட்டின் முக்கிய மரபு நிகழ்வுகளில் பிரதான பங்கு வகிப்பவராகவும் இருக்கிறார். 


பல மொழிகளில் திறம்பட பேசக்கூடிய இவர், தனது பயிற்சி மற்றும் கல்வியைத் தொடர்ந்துள்ளார்,


இதன் மூலம் ஸ்பெயினின் அரச குடும்பத்தின் வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார்.

ஸ்பெயினின் முதல் இளம் ராணியான இளவரசி லியோனோர் ஸ்பெயினின் வரலாற்றில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக, 20 வயது இளவரசி லியோனோர்  நாட்டின் ராணியாக பொறுப்பேற்க உள்ளார். 1800களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவிற்குப் பிறகு, நாட்டின் முதல் ஆளும் இராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோனோர், தனது உயர் கல்வியை வேல்ஸில் உள்ள UWC அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலைப் பட்டயப் படிப்பைத் தொடங்கினார்.அதன் பிறகு நாட்டின் வருங்காலத் தலைமைத் தளபதியாக தனது இராணுவப் பயிற்சியைத் தொடங்கினார்.   இளவரசி லியோனர், ராணியாக மாறுவதற்காக முப்படைகளிலும் பயிற்சி பெற்றுள்ளார்.கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் இராயுவ பயிற்சி போன்ற கடுமையான பாதுகாப்பு மற்றும் இராணுவத் திட்டங்களில் பயிற்சி பெற்றுள்ளார். லியோனர் இப்பொழுது ஸ்பெயினின் ஆயுதப் படைகளின் எதிர்காலத் தளபதியாகவும், நாட்டின் முக்கிய மரபு நிகழ்வுகளில் பிரதான பங்கு வகிப்பவராகவும் இருக்கிறார். பல மொழிகளில் திறம்பட பேசக்கூடிய இவர், தனது பயிற்சி மற்றும் கல்வியைத் தொடர்ந்துள்ளார்,இதன் மூலம் ஸ்பெயினின் அரச குடும்பத்தின் வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement