• Jul 11 2025

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல - வெகுமானம் - சீமான் இடித்துரைப்பு!

shanuja / Jul 11th 2025, 10:27 am
image

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல . அது வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


மதுரையில் “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற ஆடு, மாடுகளின் மாநாடு ஒன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில்  நேற்று  இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

ஆடு, மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரை நாட்டில் பசி பட்டினி இருக்காது. 

தமிழகத்தில் 12 இலட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளது. எனினும் அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர். தமிழகத்தில் 138,000 கோடி இந்திய ரூபா அளவுக்கு, பாலுக்கான சந்தை மதிப்பு உள்ளது. 

 

இருந்தாலும், வெறும் 50,000 கோடி ரூபா சந்தை மதிப்புள்ள சாராயத்தைக் குடிக்க வைத்துக் குடும்பப்பெண்களின் வாழ்க்கையைத் தமிழக அரசாங்கம் நாசமாக்குகிறது.


இ்த நிலையை மாற்ற எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று தேனி மலையடிவாரத்தில் எனது  மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்போகின்றேன்.- என்றார்.

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல - வெகுமானம் - சீமான் இடித்துரைப்பு ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல . அது வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற ஆடு, மாடுகளின் மாநாடு ஒன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில்  நேற்று  இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஆடு, மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரை நாட்டில் பசி பட்டினி இருக்காது. தமிழகத்தில் 12 இலட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளது. எனினும் அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர். தமிழகத்தில் 138,000 கோடி இந்திய ரூபா அளவுக்கு, பாலுக்கான சந்தை மதிப்பு உள்ளது.  இருந்தாலும், வெறும் 50,000 கோடி ரூபா சந்தை மதிப்புள்ள சாராயத்தைக் குடிக்க வைத்துக் குடும்பப்பெண்களின் வாழ்க்கையைத் தமிழக அரசாங்கம் நாசமாக்குகிறது.இ்த நிலையை மாற்ற எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று தேனி மலையடிவாரத்தில் எனது  மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்போகின்றேன்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement