திருகோணமலை மாவட்டத்தில் மிக நீண்ட கால வரட்சியான கால நிலையின் பின்னர் நேற்று (01)மாலை கனமழை பெய்தது.
அதிக வெப்பத்துடன் உடனான எல்நினோவின் கால நிலை தாக்கம் காரணமாக குளங்கள் வற்றி வரண்ட நிலை காணப்பட்ட நிலையில் மழை பெய்தமையால் சூடு ஓரளவு தனிந்துள்ளது.
கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை, கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை பெய்தது.
தொடர்ச்சியான கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால் மக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், இன்று பெய்த மழை அவர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சியால் நீர்நிலைகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதுடன், கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் பெய்துள்ள மழை, நீர் வளங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட வரட்சிக்குப் பின்னர் திருகோணமலையில் கனமழை திருகோணமலை மாவட்டத்தில் மிக நீண்ட கால வரட்சியான கால நிலையின் பின்னர் நேற்று (01)மாலை கனமழை பெய்தது.அதிக வெப்பத்துடன் உடனான எல்நினோவின் கால நிலை தாக்கம் காரணமாக குளங்கள் வற்றி வரண்ட நிலை காணப்பட்ட நிலையில் மழை பெய்தமையால் சூடு ஓரளவு தனிந்துள்ளது.கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை, கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை பெய்தது.தொடர்ச்சியான கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால் மக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், இன்று பெய்த மழை அவர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.வறட்சியால் நீர்நிலைகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதுடன், கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் பெய்துள்ள மழை, நீர் வளங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.