• Oct 30 2025

கிரிக்கெட் ஒருநாள் தரப்படுத்தலில் ரோகித் முதலிடம்!

shanuja / Oct 29th 2025, 4:07 pm
image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று (29) வெளியிட்டுள்ளது. 


அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். 


ரோகித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார். 


இதனால் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின் தள்ளி 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார். 


அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 


அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். 


இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் ஒரு இடம் முன்னேறி 11ஆம் இடத்திலும், பெத்தும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 12 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். 


மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 


இதுதவிர பங்களாதேஷ் அணியின் சவுமியா சர்க்கார் 24 இடங்கள் முன்னேறி 62 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.


கிரிக்கெட் ஒருநாள் தரப்படுத்தலில் ரோகித் முதலிடம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று (29) வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார். இதனால் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின் தள்ளி 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார். அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் ஒரு இடம் முன்னேறி 11ஆம் இடத்திலும், பெத்தும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 12 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதுதவிர பங்களாதேஷ் அணியின் சவுமியா சர்க்கார் 24 இடங்கள் முன்னேறி 62 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement