• Oct 30 2025

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

Chithra / Oct 29th 2025, 2:21 pm
image

 

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்பரப்பில்  சட்டவிரோத வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு மீன்பிடியில் ஈடுபட்ட படகு, டைனமைட் மற்றும் உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது  திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்பரப்பில்  சட்டவிரோத வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு மீன்பிடியில் ஈடுபட்ட படகு, டைனமைட் மற்றும் உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மீனவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement