இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று (29) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்பதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவிற்கு பிடியாணை இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார். இந்த வழக்கு இன்று (29) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்பதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்தார். அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரீசிலித்த நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.