• Oct 29 2025

மன்னாரில் உணவகம், வெதுப்பகம் மற்றும் வர்த்தக நிலையத்திற்கு சீல்!

shanuja / Oct 29th 2025, 2:15 pm
image

மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த  உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம்  இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது


மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் உள்ளடங்களாக மருத்துவசான்றிதழ், உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த வெதுப்பகம், உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது


மன்னார் மாவட்டத்தில் உணவகங்கள் தொடர்பில் தொடர்சியாக நகரசபைக்கு கிடைக்க பெற்று வரும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் இணங்கானப்பட்ட நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


குறிப்பாக மன்னார் மூர்வீதியில் சுகாதார மற்ற முறையில் உணவுகளை களஞ்சியப்படுத்தி,உரிய அனுமதி பெறாது இயங்கி வந்த  உணவகம் ஒன்றுக்கும் மன்னார் உப்புக்குளம் பகுதியில் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றுக்கும் மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியில் இயங்கி வந்த ஒரு வர்த்தக நிலையத்திற்கும் மேற்படி சீல் வைக்கப்பட்டுள்ளது


மன்னாரில் உணவகம், வெதுப்பகம் மற்றும் வர்த்தக நிலையத்திற்கு சீல் மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த  உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம்  இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதுமன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் உள்ளடங்களாக மருத்துவசான்றிதழ், உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த வெதுப்பகம், உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுமன்னார் மாவட்டத்தில் உணவகங்கள் தொடர்பில் தொடர்சியாக நகரசபைக்கு கிடைக்க பெற்று வரும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் இணங்கானப்பட்ட நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுகுறிப்பாக மன்னார் மூர்வீதியில் சுகாதார மற்ற முறையில் உணவுகளை களஞ்சியப்படுத்தி,உரிய அனுமதி பெறாது இயங்கி வந்த  உணவகம் ஒன்றுக்கும் மன்னார் உப்புக்குளம் பகுதியில் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றுக்கும் மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியில் இயங்கி வந்த ஒரு வர்த்தக நிலையத்திற்கும் மேற்படி சீல் வைக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement