2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன என்றும், பரீட்சை மத்திய நிலையங்கள், பரீட்சை வினாத்தாள்கள், மற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அறிக்கை பின்வருமாறு,
நேர அட்டவணை
II, ஆம் வினாப்பத்திரம் - 09.30 - 10.45 மணி
I ஆம் வினாப்பத்திரம் - 11.15 - 12.15 மணி
மேற்படி பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரையில் வரவு இடாப்பு கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபர்கள் www.doenets.lk இற்குப் பிரவேசித்து 'எமது சேவை' இன் கீழுள்ள Exam Information Centre' இன் மீது சொடுக்குவதன் மூலமோ அல்லது http://onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதன் மூலமோ வரவு இடாப்பைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அங்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் 2025 ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத்தருகின்றேன்.
விசாரணைகள் :-
தொலைபேசி இலக்கங்கள் : 011-2784208, 2784537, 2786616, 2785413
துரித அழைப்பு இலக்கம் : 1911
தொலைநகல் இலக்கம் : 011-2784422
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை- வெளியான அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.அதற்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன என்றும், பரீட்சை மத்திய நிலையங்கள், பரீட்சை வினாத்தாள்கள், மற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அறிக்கை பின்வருமாறு, நேர அட்டவணை II, ஆம் வினாப்பத்திரம் - 09.30 - 10.45 மணி I ஆம் வினாப்பத்திரம் - 11.15 - 12.15 மணி மேற்படி பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரையில் வரவு இடாப்பு கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபர்கள் www.doenets.lk இற்குப் பிரவேசித்து 'எமது சேவை' இன் கீழுள்ள Exam Information Centre' இன் மீது சொடுக்குவதன் மூலமோ அல்லது http://onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதன் மூலமோ வரவு இடாப்பைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அங்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் 2025 ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத்தருகின்றேன். விசாரணைகள் :- தொலைபேசி இலக்கங்கள் : 011-2784208, 2784537, 2786616, 2785413 துரித அழைப்பு இலக்கம் : 1911 தொலைநகல் இலக்கம் : 011-2784422