• May 29 2025

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி: தமிழரசு-முஸ்லீம் காங்கிரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து..!

Sharmi / May 27th 2025, 12:40 pm
image

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் இன்று(27) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த வகையில் திருகோணமலை மாநகரசபை,பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர்,குச்சவெளி தம்பலகாமம் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கிடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

குறித்த சபைகளில் தவிசாளர் பதவிகளை இரு கட்சிகளும் புரிந்துணர்வின் அடிப்படையில் வகிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி: தமிழரசு-முஸ்லீம் காங்கிரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் இன்று(27) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.அந்த வகையில் திருகோணமலை மாநகரசபை,பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர்,குச்சவெளி தம்பலகாமம் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கிடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுகுறித்த சபைகளில் தவிசாளர் பதவிகளை இரு கட்சிகளும் புரிந்துணர்வின் அடிப்படையில் வகிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement