• Aug 13 2025

கடன்களை திருப்பிச் செலுத்தும் வரை எரிபொருள் வரியை நீக்க முடியாது - எரிசக்தி அமைச்சர்!

shanuja / Aug 12th 2025, 11:27 am
image

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரிகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 


தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


எரிசக்தி அமைச்சர், CPCயின் கடன்களில் ஒரு பகுதி தற்போது திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த வரிகளை நீக்குவது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


கடனில் 30% முதல் 40% வரை திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். கடன் திருப்பிச் செலுத்தும் வரை, 50% எரிபொருள் வரியைக் குறைக்க முடியாது. 


இப்போது அவ்வாறு செய்தால், தொகையை வசூலிக்க வேறு வழிகளைப் பார்க்க வேண்டியிருக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன்களை திருப்பிச் செலுத்தும் வரை எரிபொருள் வரியை நீக்க முடியாது - எரிசக்தி அமைச்சர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரிகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிசக்தி அமைச்சர், CPCயின் கடன்களில் ஒரு பகுதி தற்போது திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.இந்த வரிகளை நீக்குவது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடனில் 30% முதல் 40% வரை திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். கடன் திருப்பிச் செலுத்தும் வரை, 50% எரிபொருள் வரியைக் குறைக்க முடியாது. இப்போது அவ்வாறு செய்தால், தொகையை வசூலிக்க வேறு வழிகளைப் பார்க்க வேண்டியிருக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement