• Aug 12 2025

நித்திரைக்கலக்கத்தில் லொறியை மோதித்தள்ளிய எரிபொருள் பவுசர் - சாரதி ஒருவர் காயம்!

shanuja / Aug 11th 2025, 5:44 pm
image

எரிபொருள் கொள்கலன் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.  


இந்த விபத்துச் சம்பவம் குருநாகல்- நீர்கொழும்பு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை (11) இடம்பெற்றுள்ளது. 


விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், 


குறித்த வீதியால் சென்று கொண்டிருந்த எரிபொருள் ஏற்றிய கொள்கலன் வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் சாரதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


எரிபொருள் கொள்கலன் சாரதியின் நித்திரைக் கலக்கம் காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


நித்திரைக் கலக்கத்தில் எரிபொருள் கொள்கலனைச் செலுத்திச் சென்ற சாரதி பாரவூர்தியை மோதியதில்  அருகிலிருந்த கட்டடத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நித்திரைக்கலக்கத்தில் லொறியை மோதித்தள்ளிய எரிபொருள் பவுசர் - சாரதி ஒருவர் காயம் எரிபொருள் கொள்கலன் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.  இந்த விபத்துச் சம்பவம் குருநாகல்- நீர்கொழும்பு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை (11) இடம்பெற்றுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த வீதியால் சென்று கொண்டிருந்த எரிபொருள் ஏற்றிய கொள்கலன் வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் சாரதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் கொள்கலன் சாரதியின் நித்திரைக் கலக்கம் காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நித்திரைக் கலக்கத்தில் எரிபொருள் கொள்கலனைச் செலுத்திச் சென்ற சாரதி பாரவூர்தியை மோதியதில்  அருகிலிருந்த கட்டடத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement