• Apr 30 2025

உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சினால் மட்டக்களப்பு மாநகரசபை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

Thansita / Apr 30th 2025, 6:00 pm
image

தேர்தல் திணைக்களத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் பணிகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக உள்ளூராட்சி சபை அமைச்சினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

அரசாங்கத்தினால் சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மாநகர சபை புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் சபை வளாகத்தில் இடம்பெற்றது.

சமய வழிபாடுகளின் பின் அதிதிகளினால் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர்கள், பிரதேச செயலாளர், அரச உயர் அதிகாரிகள்,

சபையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சினால் மட்டக்களப்பு மாநகரசபை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு தேர்தல் திணைக்களத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் பணிகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக உள்ளூராட்சி சபை அமைச்சினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.அரசாங்கத்தினால் சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மாநகர சபை புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் சபை வளாகத்தில் இடம்பெற்றது.சமய வழிபாடுகளின் பின் அதிதிகளினால் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர்கள், பிரதேச செயலாளர், அரச உயர் அதிகாரிகள், சபையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement