தென் சீனக் கடலில் சீனாவின் சமீபத்திய கடல்சார் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பிலிப்பைன்ஸுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பெய்ஜிங் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் “ஆபத்தானவை மற்றும் ஆக்கிரமிப்பு தன்மை கொண்டவை” என வாஷிங்டன் விமர்சித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில், பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் ரூபியோவின் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடலில் பல நாடுகள் உரிமை கோரி வரும் நிலையில், சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பாக பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது, தென் சீனக் கடல் விவகாரத்தில் வாஷிங்டன்–பெய்ஜிங் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சீனக் கடலில் உச்ச கட்ட பதற்றம் தென் சீனக் கடலில் சீனாவின் சமீபத்திய கடல்சார் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பிலிப்பைன்ஸுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பெய்ஜிங் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் “ஆபத்தானவை மற்றும் ஆக்கிரமிப்பு தன்மை கொண்டவை” என வாஷிங்டன் விமர்சித்துள்ளது.இந்த பதற்றமான சூழலில், பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் ரூபியோவின் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் சீனக் கடலில் பல நாடுகள் உரிமை கோரி வரும் நிலையில், சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பாக பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது, தென் சீனக் கடல் விவகாரத்தில் வாஷிங்டன்–பெய்ஜிங் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.