• Apr 30 2025

மன்னார் CTBயின் அவல நிலை - குறைகள் தீர்க்க நடவடிக்கை

Thansita / Apr 30th 2025, 6:58 pm
image

மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் இன்றையதினம் கண்காணிப்பு வியஜம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப்பின்றிய நிலையில் காணப்பட்டது

குறித்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படாமையினால் இந்த நிலை என மன்னார் போக்குவரத்து சாலையினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல தூர பகுதிகளுக்கான சேவை நீண்டகாலங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளுக்கு மிகவும் பழுதடைந்த பேருந்துகளையே மன்னார் போக்குவரத்து சாலை பயன்படுத்தி வருகின்றது

இவ்வாறான நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கண்காணிப்பு விஜயத்தின் பின் கருத்து தெரிவிக்கையில் 

மன்னார் பொது போக்குவரத்து சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதே நேரம் பழுதடைந்துள்ள பேருந்துகளை மீள்பயன்பாட்டுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் 

ஐந்து திருத்தப்பட்ட இஞ்சின்கள் விரைவில் மன்னார் போக்குவரத்து சாலைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்

அதே நேரம்  மன்னார் மற்றும் முல்லைத்தீவு பொது போக்குவரத்து சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பல கோடி பெறுமதியான அரச சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும்  இந்த நிலைக்கான காரணம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மோற்கொள்ளவுள்ளதாகவும் பொது போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்திருந்தார்

மன்னார் போக்குவரத்து சாலையின் இந்த நிலை தொடர்பிலும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பிலும் பல வருடங்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை 

மேலும் கடந்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு உயர் அதிகாரிகளும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாகவோ பேருந்து சாலையின் நிலை தொடர்பாகவோ பார்வையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மன்னார் CTBயின் அவல நிலை - குறைகள் தீர்க்க நடவடிக்கை மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் இன்றையதினம் கண்காணிப்பு வியஜம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப்பின்றிய நிலையில் காணப்பட்டதுகுறித்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படாமையினால் இந்த நிலை என மன்னார் போக்குவரத்து சாலையினரால் தெரிவிக்கப்பட்டிருந்ததுஅதே நேரம் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல தூர பகுதிகளுக்கான சேவை நீண்டகாலங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளுக்கு மிகவும் பழுதடைந்த பேருந்துகளையே மன்னார் போக்குவரத்து சாலை பயன்படுத்தி வருகின்றதுஇவ்வாறான நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கண்காணிப்பு விஜயத்தின் பின் கருத்து தெரிவிக்கையில் மன்னார் பொது போக்குவரத்து சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதே நேரம் பழுதடைந்துள்ள பேருந்துகளை மீள்பயன்பாட்டுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஐந்து திருத்தப்பட்ட இஞ்சின்கள் விரைவில் மன்னார் போக்குவரத்து சாலைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்அதே நேரம்  மன்னார் மற்றும் முல்லைத்தீவு பொது போக்குவரத்து சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பல கோடி பெறுமதியான அரச சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும்  இந்த நிலைக்கான காரணம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மோற்கொள்ளவுள்ளதாகவும் பொது போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்திருந்தார்மன்னார் போக்குவரத்து சாலையின் இந்த நிலை தொடர்பிலும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பிலும் பல வருடங்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை மேலும் கடந்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு உயர் அதிகாரிகளும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாகவோ பேருந்து சாலையின் நிலை தொடர்பாகவோ பார்வையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement