• Jul 22 2026

பிரதமர் மோடி இல்லம் அருகே பரபரப்பு; ராகுல் காந்தியை தூக்கிச் சென்ற பொலிஸார்!

Chithra / Jul 21st 2026, 8:10 pm
image


நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று (21) மேலும் தீவிரமடைந்துள்ளது.


நேற்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரைக் கலைக்க டெல்லி பொலிஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியிருந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வந்த இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பங்கேற்றார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களும் இந்தப் பேரணியில் இணைந்தனர்.


ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் வரை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் போது, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


இதையடுத்து டெல்லி பொலிஸார் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மத்திய இணை அமைச்சரும் நேரில் வந்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், காங்கிரஸ் தரப்பு போராட்டத்தைத் தொடர்ந்தது.


இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் காவலில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் இல்லம் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியை பொலிஸார் பலவந்தமாக அப்புறப்படுத்தியபோது, அவரது மூக்கு அருகே காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சில காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்த நடவடிக்கையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இல்லம் அருகே பரபரப்பு; ராகுல் காந்தியை தூக்கிச் சென்ற பொலிஸார் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று (21) மேலும் தீவிரமடைந்துள்ளது.நேற்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரைக் கலைக்க டெல்லி பொலிஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியிருந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வந்த இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பங்கேற்றார்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களும் இந்தப் பேரணியில் இணைந்தனர்.ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் வரை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து டெல்லி பொலிஸார் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மத்திய இணை அமைச்சரும் நேரில் வந்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், காங்கிரஸ் தரப்பு போராட்டத்தைத் தொடர்ந்தது.இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் காவலில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் இல்லம் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியை பொலிஸார் பலவந்தமாக அப்புறப்படுத்தியபோது, அவரது மூக்கு அருகே காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சில காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்த நடவடிக்கையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement