• Jul 22 2026

உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் பரபரப்பு; சிறுவன் பலி - பலர் காயம்

Chithra / Jul 21st 2026, 10:10 am
image


ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.


இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் உள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரில் ஆர்போல் கோர்டோ நீரூற்று அருகே ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டனர்.


திங்கட்கிழமை அதிகாலை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டிய நிலையில், பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது.


இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சம்பவத்தைத் தொடர்ந்து சியுடாட் ரோட்ரிகோ நகர மன்றம், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், மாநகரக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த துயர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் பரபரப்பு; சிறுவன் பலி - பலர் காயம் ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் உள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரில் ஆர்போல் கோர்டோ நீரூற்று அருகே ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டனர்.திங்கட்கிழமை அதிகாலை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டிய நிலையில், பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவத்தைத் தொடர்ந்து சியுடாட் ரோட்ரிகோ நகர மன்றம், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், மாநகரக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த துயர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement