வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் இந்திய துணைத் தூதரக அலுவலர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில், யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த சஜிதானந்த பிரபாகர குருக்கள் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காரை செலுத்திச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த உத்தியோகத்தர் இறுதியாக இந்தியாவுக்கு தலயாத்திரை மேற்கொண்டு அது தொடர்பான புகைப்படங்களையும் முகநூலில் பதிவிட்டுள்ளதுடன், தலயாத்திரை முடித்து இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பி தமது வீட்டிற்கு பயணித்த வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் இந்திய தூதரக அலுவலர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கோரவிபத்து: மதகுரு ஸ்தலத்தில் உயிரிழப்பு. வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் இந்திய துணைத் தூதரக அலுவலர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில், யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த சஜிதானந்த பிரபாகர குருக்கள் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.காரை செலுத்திச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.உயிரிழந்த உத்தியோகத்தர் இறுதியாக இந்தியாவுக்கு தலயாத்திரை மேற்கொண்டு அது தொடர்பான புகைப்படங்களையும் முகநூலில் பதிவிட்டுள்ளதுடன், தலயாத்திரை முடித்து இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பி தமது வீட்டிற்கு பயணித்த வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்தில் இந்திய தூதரக அலுவலர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.