• May 21 2025

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Chithra / May 21st 2025, 9:40 am
image

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர்  நேற்று  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தங்கவேலு கலைச்செல்வன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர். 

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். 

பின்னர் காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் போலீசார் நெறிப்படுத்தினர்.

உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர்  நேற்று  உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தங்கவேலு கலைச்செல்வன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் போலீசார் நெறிப்படுத்தினர்.உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement