• Oct 16 2026

ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்!

Chithra / Oct 16th 2026, 2:46 pm
image


முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட இணைப்புக் கடிதத்துடன் குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது மருத்துவ அறிக்கையை ஆராய்ந்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான முக்கிய தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


குறிப்பாக, அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனையடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை விரிவாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.


அதற்காக வழக்கை இன்று பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.


இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணைகளை பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.


ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக 14 விசேட வைத்தியர்களைக் கொண்ட மருத்துவக் குழுவொன்று அண்மையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபா நிதி, சிரிலிய சவிய கணக்கிற்கு மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ச மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


இதனையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையை அடுத்து, பிற்பகல் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட இணைப்புக் கடிதத்துடன் குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது மருத்துவ அறிக்கையை ஆராய்ந்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான முக்கிய தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.குறிப்பாக, அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனையடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை விரிவாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.அதற்காக வழக்கை இன்று பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணைகளை பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக 14 விசேட வைத்தியர்களைக் கொண்ட மருத்துவக் குழுவொன்று அண்மையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபா நிதி, சிரிலிய சவிய கணக்கிற்கு மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ச மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.இதனையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையை அடுத்து, பிற்பகல் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement