கொட்டும் மழை மற்றும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்று (16) 26ஆவது வாரமாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காகக் கடந்த 26 வாரங்களாக வீதியில் இறங்கிப் போராடிவரும் மக்கள், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.
மழை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது முன்னெடுத்துவரும் மக்கள், தமது பூர்வீகக் காணிகளில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விரைவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையின்போதாவது தமது நீண்டகாலக் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மயிலிட்டி மக்கள் காத்திருக்கின்றனர்.
தொடர்ச்சியாக 26 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தக் காணி மீட்புப் போராட்டத்திற்கு ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தீர்வைப் பெற்றுத்தருமா என்பதே தற்போது மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
கொட்டும் மழையிலும் ஓயாத போராட்டம் அனுர தீர்வு வழங்குவாரா கொட்டும் மழை மற்றும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்று (16) 26ஆவது வாரமாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காகக் கடந்த 26 வாரங்களாக வீதியில் இறங்கிப் போராடிவரும் மக்கள், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.மழை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது முன்னெடுத்துவரும் மக்கள், தமது பூர்வீகக் காணிகளில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.அத்துடன், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விரைவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையின்போதாவது தமது நீண்டகாலக் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மயிலிட்டி மக்கள் காத்திருக்கின்றனர்.தொடர்ச்சியாக 26 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தக் காணி மீட்புப் போராட்டத்திற்கு ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தீர்வைப் பெற்றுத்தருமா என்பதே தற்போது மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.