பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் அனைவரும் இன்று (16) பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவைத் தொடர்ந்து பிக்குகள் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில், குறித்த பகுதியில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேர் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில், கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று முற்பகல் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் அனைவரும் இன்று பிற்பகல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
அங்கிருந்து வெளியேறிய பிக்குகள், பௌத்த மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சில் நடைபெறும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 10ஆம் திகதி கண்டியில் பௌத்த பிக்குகளால் 'சுதந்திரத்துக்கான நடைபயணம்' ஆரம்பிக்கப்பட்டது.
பல பகுதிகளைக் கடந்து முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபயணம் நேற்று (15) மாலை கொழும்பை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் திரண்ட பௌத்த பிக்குகள், ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று இரவு முழுவதும் தொடர்ந்த இந்தப் போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், நீதிமன்றத்தின் தடை உத்தரவைத் தொடர்ந்து பிக்குகள் அங்கிருந்து வெளியேறியதால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதேவேளை, காலி முகத்திடல் பகுதியில் போராட்டத்தைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மிரட்டி அங்கிருந்து விரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஊடகவியலாளரிடம் ஊடக அடையாள அட்டை உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர், அவருடன் முரண்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து பிக்குகள் வெளியேறியதால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளது.
பிக்குகளின் போராட்டம் தோல்வியில் முடிந்ததா ஊடகவியலாளருக்கு மிரட்டல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் அனைவரும் இன்று (16) பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.நீதிமன்றத்தின் தடை உத்தரவைத் தொடர்ந்து பிக்குகள் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில், குறித்த பகுதியில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேர் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில், கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று முற்பகல் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் அனைவரும் இன்று பிற்பகல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.அங்கிருந்து வெளியேறிய பிக்குகள், பௌத்த மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சில் நடைபெறும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 10ஆம் திகதி கண்டியில் பௌத்த பிக்குகளால் 'சுதந்திரத்துக்கான நடைபயணம்' ஆரம்பிக்கப்பட்டது.பல பகுதிகளைக் கடந்து முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபயணம் நேற்று (15) மாலை கொழும்பை வந்தடைந்தது.இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் திரண்ட பௌத்த பிக்குகள், ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.நேற்று இரவு முழுவதும் தொடர்ந்த இந்தப் போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.எனினும், நீதிமன்றத்தின் தடை உத்தரவைத் தொடர்ந்து பிக்குகள் அங்கிருந்து வெளியேறியதால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.இதேவேளை, காலி முகத்திடல் பகுதியில் போராட்டத்தைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மிரட்டி அங்கிருந்து விரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஊடகவியலாளரிடம் ஊடக அடையாள அட்டை உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர், அவருடன் முரண்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தச் சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து பிக்குகள் வெளியேறியதால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளது.