திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், விவசாயிகள் தமது வயல் நிலங்களை நெற்செய்கைக்கு ஏற்றவாறு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தம்பலகாமம் மற்றும் முள்ளிப்பொத்தானை கமநல சேவைகள் பிரிவுகளுக்குட்பட்ட வயல் நிலங்களில் உழுதல், நிலங்களைச் சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக விவசாயிகள் இயந்திரங்களையும் மனிதவளத்தையும் பயன்படுத்தி வயல் நிலங்களைத் தயார்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, அண்மைய நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேசத்தின் சில வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையிலும், உரிய பருவத்தில் நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில் விவசாயிகள் தமது முன்னேற்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது.
மழையால் நீரில் மூழ்கிய வயல்கள் - நெற்செய்கைக்காக வயல்களில் இறங்கிய விவசாயிகள் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், விவசாயிகள் தமது வயல் நிலங்களை நெற்செய்கைக்கு ஏற்றவாறு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, தம்பலகாமம் மற்றும் முள்ளிப்பொத்தானை கமநல சேவைகள் பிரிவுகளுக்குட்பட்ட வயல் நிலங்களில் உழுதல், நிலங்களைச் சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்காக விவசாயிகள் இயந்திரங்களையும் மனிதவளத்தையும் பயன்படுத்தி வயல் நிலங்களைத் தயார்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.இதேவேளை, அண்மைய நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேசத்தின் சில வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இவ்வாறான சூழ்நிலையிலும், உரிய பருவத்தில் நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில் விவசாயிகள் தமது முன்னேற்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது.