• Oct 24 2026

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள்.! - எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் லால் காந்த சாட்டையடி

Aathira / Oct 24th 2026, 12:51 pm
image

பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசானது எந்தவொரு நிலையிலும் பலவீனமான ஓர் அரசு அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசின் நிர்வாகப் பொறிமுறையும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் பலமான ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல.

ஜனநாயக ரீதியாக மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணையைக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய போலிப் பிரசாரங்களைக் கண்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள்.

எனவே, எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பொய்யான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, நாட்டின் அபிவிருத்திக்குச் சாதகமான முறையில் பொறுப்புடன் தொழிற்பட வேண்டும். அத்தகைய பிரசாரங்களால் அரசின் பயணத்தைத் தடுக்க முடியாது என்றார்.

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள். - எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் லால் காந்த சாட்டையடி பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசானது எந்தவொரு நிலையிலும் பலவீனமான ஓர் அரசு அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்.மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசின் நிர்வாகப் பொறிமுறையும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நாட்டின் பெரும்பான்மை மக்களின் பலமான ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல.ஜனநாயக ரீதியாக மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணையைக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய போலிப் பிரசாரங்களைக் கண்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள்.எனவே, எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பொய்யான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, நாட்டின் அபிவிருத்திக்குச் சாதகமான முறையில் பொறுப்புடன் தொழிற்பட வேண்டும். அத்தகைய பிரசாரங்களால் அரசின் பயணத்தைத் தடுக்க முடியாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement