• Nov 22 2025

தடம்புரண்ட சரக்கு ரயில்; மலையக ரயில் சேவை பாதிப்பு!

shanuja / Nov 18th 2025, 3:00 pm
image

சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்திலான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இன்று காலை 11:30 மணியளவில் கண்டியிலிருந்து பதுளைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில்,  ஓஹியா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்திலான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


ரயிலின் ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டதால், கொழும்பு – கோட்டை – பதுளை இடையிலான பயணிகள் ரயில்கள் பாதிக்கப்படாமல், மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


ரயில்வே அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக செயல்பட்டு, ரயில் பாதை சரி செய்யும் வரை பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தடம்புரண்ட சரக்கு ரயில்; மலையக ரயில் சேவை பாதிப்பு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்திலான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 11:30 மணியளவில் கண்டியிலிருந்து பதுளைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில்,  ஓஹியா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்திலான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ரயிலின் ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டதால், கொழும்பு – கோட்டை – பதுளை இடையிலான பயணிகள் ரயில்கள் பாதிக்கப்படாமல், மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக செயல்பட்டு, ரயில் பாதை சரி செய்யும் வரை பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement