• May 14 2025

செலவின குறைப்பு: 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல கார் நிறுவனம்..!

Sharmi / May 13th 2025, 8:45 pm
image

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார், 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே பல கட்டமாக செலவின குறைப்பு, பணிநீக்கம் செய்துள்ள நிலையிலேயே தற்போதும் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குறித்த நிறுவனம் கடந்த மாதம், மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 700-750 பில்லியன் யென் (4.74-5.08 பில்லியன் டாலர்) நிகர நஷ்டத்தை எதிர்பார்ப்பதாக முதலீட்டாளர்களுக்கு முன் கணிப்பை வெளியிட்டது. 

இந்த நஷ்டம், நிறுவனத்தின் மதிப்பு குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இந்த இழப்பை சமாளிக்கவே அடுத்த காலாண்டில் அல்லது நிதியாண்டில் இலாபகரமாக மாற திட்டமிட்டு இந்த 30,000 பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை எடுத்துள்ளது. 

ஜப்பான் நாட்டின் இரு மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மற்றும் ஹோண்டா, டிசம்பர் 2024 இல் தங்கள் வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளங்களை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன.

இந்த இணைப்பு, உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரை உருவாக்கும் மாபெரும் இலக்கை கொண்டிருந்தது. 

ஆனால், ஆரம்பம் முதலே இந்த இணைப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தன.

இறுதியில் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முடிவு, ஜப்பான் வாகனத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செலவின குறைப்பு: 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல கார் நிறுவனம். ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார், 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே பல கட்டமாக செலவின குறைப்பு, பணிநீக்கம் செய்துள்ள நிலையிலேயே தற்போதும் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.குறித்த நிறுவனம் கடந்த மாதம், மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 700-750 பில்லியன் யென் (4.74-5.08 பில்லியன் டாலர்) நிகர நஷ்டத்தை எதிர்பார்ப்பதாக முதலீட்டாளர்களுக்கு முன் கணிப்பை வெளியிட்டது. இந்த நஷ்டம், நிறுவனத்தின் மதிப்பு குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த இழப்பை சமாளிக்கவே அடுத்த காலாண்டில் அல்லது நிதியாண்டில் இலாபகரமாக மாற திட்டமிட்டு இந்த 30,000 பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை எடுத்துள்ளது. ஜப்பான் நாட்டின் இரு மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மற்றும் ஹோண்டா, டிசம்பர் 2024 இல் தங்கள் வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளங்களை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன. இந்த இணைப்பு, உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரை உருவாக்கும் மாபெரும் இலக்கை கொண்டிருந்தது. ஆனால், ஆரம்பம் முதலே இந்த இணைப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தன. இறுதியில் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முடிவு, ஜப்பான் வாகனத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement