• Jul 06 2025

ட்ரம்ப்புடன் மோதல்; புதிய கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

Chithra / Jul 6th 2025, 11:47 am
image


உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ளார்.

தனது X தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைக்கு சவால் விடுக்கும் வகையில் 'America Party' எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

மஸ்க்கின் புதிய கட்சி, அமெரிக்க தேர்தல் அதிகாரிகளால் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

அத்துடன் புதிய கட்சியை யார் வழிநடத்துவார்கள் அல்லது கட்சியின் அமைப்பு என்பன தொடர்பில் மஸ்க் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது X தளத்தில் 

அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம். வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தை திரும்ப வழங்குவதற்காக  ‘தி அமெரிக்க பார்ட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது, என்று மஸ்க் பதிவிட்டார்.

ட்ரம்ப்புடன் மோதல்; புதிய கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ளார்.தனது X தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைக்கு சவால் விடுக்கும் வகையில் 'America Party' எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.மஸ்க்கின் புதிய கட்சி, அமெரிக்க தேர்தல் அதிகாரிகளால் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.அத்துடன் புதிய கட்சியை யார் வழிநடத்துவார்கள் அல்லது கட்சியின் அமைப்பு என்பன தொடர்பில் மஸ்க் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் தனது X தளத்தில் அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம். வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தை திரும்ப வழங்குவதற்காக  ‘தி அமெரிக்க பார்ட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது, என்று மஸ்க் பதிவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement