• Jul 28 2025

இலங்கையில் சிக்கிய சீன பிரஜைகள் - போலி நாணயத்தாள்கள், இரத்தினக் கற்கள் மீட்பு

Chithra / Jul 26th 2025, 10:24 am
image


இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் 28 வயதுடைய சீன பிரஜை என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 1 ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டன. 

சந்தேக நபர் 52 வயதுடைய சீன பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் சிக்கிய சீன பிரஜைகள் - போலி நாணயத்தாள்கள், இரத்தினக் கற்கள் மீட்பு இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 28 வயதுடைய சீன பிரஜை என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 1 ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டன. சந்தேக நபர் 52 வயதுடைய சீன பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement