எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், பஸ் கட்டணங்களில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இது குறித்து கருத்துத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்தந்த நேரங்களில் நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டே பஸ் கட்டணத் திருத்தங்கள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஒருவேளை சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தால், அதன் பலனை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தகைய சூழலில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டணங்களை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
தற்போதைய கடினமான சூழ்நிலையிலும் அரசாங்கம் மக்களுக்குத் தேவையான சலுகைகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி தேசிய பஸ் கட்டணக் கொள்கை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில்,
அது மீண்டும் ஒரு கட்டண அதிகரிப்புக்கு வழிவகுக்குமா என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு
பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பஸ் கட்டணங்களில் மீண்டும் திருத்தமா - அமைச்சர் நளிந்த விளக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், பஸ் கட்டணங்களில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இது குறித்து கருத்துத் தெரிவித்தார்.மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்தந்த நேரங்களில் நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டே பஸ் கட்டணத் திருத்தங்கள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.ஒருவேளை சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தால், அதன் பலனை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தகைய சூழலில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டணங்களை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.தற்போதைய கடினமான சூழ்நிலையிலும் அரசாங்கம் மக்களுக்குத் தேவையான சலுகைகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி தேசிய பஸ் கட்டணக் கொள்கை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அது மீண்டும் ஒரு கட்டண அதிகரிப்புக்கு வழிவகுக்குமா என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.