ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ஆகியோர் முன்னெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் அமெரிக்கா பேசி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட மிகவும் விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கியத் தூதுவர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
தற்போதைய பதற்றமான சூழலில், அமெரிக்கத் தரப்புடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் சில மாற்றங்களை ஈரான் எதிர்பார்ப்பதாக வளைகுடா நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ட்ரம்பின் தூதர்களைத் தவிர்த்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் (JD Vance) பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடாகத் தொடருமானால், அவை நடுநிலையான ஒரு இடத்தில், குறிப்பாக பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு ஈரான் தயாராக இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் மட்டத்தில் ஈரான் மிகவும் அவதானமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது இப்படி இருக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறுவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டானோன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் "விவேகத்துடன்" பேசுவதாகவும், பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று டானோன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் இராணுவ இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன, அது தொடரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
போரை முடிவுறுத்த 15 யோசனைகளை முன்வைத்த அமெரிக்கா - நிராகரிக்கிறதா ஈரான் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ஆகியோர் முன்னெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் அமெரிக்கா பேசி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட மிகவும் விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கியத் தூதுவர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. தற்போதைய பதற்றமான சூழலில், அமெரிக்கத் தரப்புடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் சில மாற்றங்களை ஈரான் எதிர்பார்ப்பதாக வளைகுடா நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.ட்ரம்பின் தூதர்களைத் தவிர்த்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் (JD Vance) பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடாகத் தொடருமானால், அவை நடுநிலையான ஒரு இடத்தில், குறிப்பாக பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு ஈரான் தயாராக இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் மட்டத்தில் ஈரான் மிகவும் அவதானமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இது இப்படி இருக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறுவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டானோன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் "விவேகத்துடன்" பேசுவதாகவும், பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று டானோன் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் இராணுவ இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன, அது தொடரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.