• Jul 14 2025

படப்பிடிப்பில் விபத்து - சுழன்று விழுந்த கார்; ஸ்டண்ட் மாஸ்ரர் பலி - திரையுலகம் இரங்கல்!

shanuja / Jul 14th 2025, 1:26 pm
image

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் “வேட்டுவம்” படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞரான மோகன் ராஜ் காரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 


விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு பின், 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. 


திரைப்படத்தில்  நடிகர்கள் ஆர்யா, ‛அட்டகத்தி' தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர்  நடித்து வருகின்றனர். கதாநாயகியாக சோபிதா தலிபாலா நடிக்கிறார்.


இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் நீலம் production தயாரிப்பில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 10 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.


சூட்டிங் ஸ்பாட்டில் காரில் இருந்து ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் தவறி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனையடுத்து அவரை படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  உயிரிழந்த 52 வயதான  மோகன் ராஜ் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். 


மோகன் ராஜ் ஸ்டண்ட் யூனியனின் பொறுப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன் ராஜ் குடும்பத்தினருக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள், ஸ்டண்ட் யூனியனை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இது தொடர்பாக புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛கார் ஜம்மிங் ஸ்டண்ட் சிறப்பாக செய்வோரில் மோகன் ராஜூம் ஒருவர். கார் ஸ்டண்ட்டின்போது இன்று இறந்துவிட்டார். எங்களின் ஸ்டண்ட் யூனியன் மற்றும் இந்தியன் திரைப்படத்துறை அவரை மிஸ் செய்யும்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பில் விபத்து - சுழன்று விழுந்த கார்; ஸ்டண்ட் மாஸ்ரர் பலி - திரையுலகம் இரங்கல் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் “வேட்டுவம்” படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞரான மோகன் ராஜ் காரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு பின், 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. திரைப்படத்தில்  நடிகர்கள் ஆர்யா, ‛அட்டகத்தி' தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர்  நடித்து வருகின்றனர். கதாநாயகியாக சோபிதா தலிபாலா நடிக்கிறார்.இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் நீலம் production தயாரிப்பில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 10 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.சூட்டிங் ஸ்பாட்டில் காரில் இருந்து ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் தவறி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனையடுத்து அவரை படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  உயிரிழந்த 52 வயதான  மோகன் ராஜ் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். மோகன் ராஜ் ஸ்டண்ட் யூனியனின் பொறுப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன் ராஜ் குடும்பத்தினருக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள், ஸ்டண்ட் யூனியனை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛கார் ஜம்மிங் ஸ்டண்ட் சிறப்பாக செய்வோரில் மோகன் ராஜூம் ஒருவர். கார் ஸ்டண்ட்டின்போது இன்று இறந்துவிட்டார். எங்களின் ஸ்டண்ட் யூனியன் மற்றும் இந்தியன் திரைப்படத்துறை அவரை மிஸ் செய்யும்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement