• Sep 11 2025

மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது! ரணில் விசேட அறிக்கை

Chithra / Sep 10th 2025, 3:17 pm
image


நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். 

பாராமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இருப்பினும், இறுதியில், அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின் பொறுப்பாகும் என்று ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

புத்தர் பிறந்த நேபாளம், இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், இதுபோன்ற மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

எனவே, புத்தர் போதித்த தர்மத்தை நேபாளத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது ரணில் விசேட அறிக்கை நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். பாராமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இறுதியில், அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின் பொறுப்பாகும் என்று ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். புத்தர் பிறந்த நேபாளம், இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், இதுபோன்ற மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே, புத்தர் போதித்த தர்மத்தை நேபாளத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement