எயார் இந்தியா விமானம் ஒன்றிலிருந்த பயணி ஒருவர், தான் உட்பட விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக பயணிக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தனை செய்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
டுபாய்க்குப் பயணிப்பதற்காக பயணிகள் அனைவரும் எயார் இந்தியா விமானமொன்றில் தயாராக இருந்தனர்.
அதன்போதே விமானத்திலிருந்த பயணி ஒருவர் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார். அவர் தனது பிரார்த்தனையில் தெரிவிக்கையில்,
ஏயார் இந்தியா விமானத்தில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு இயந்திரக் கோளாறு ஏற்படுகிறது. இன்றைக்கு நாம் அனைவரும் இந்த விமானத்தில் அமர்ந்திருக்கிறோம். நாம் எல்லோரும் சுகமாக போய் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்க வேண்டும்.
ஆண்டவர் நம்மை பத்திரமாய் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயத்தோடு தான் இருப்பார்கள்.
கடந்த நாட்களிலே அகமதாபாத் விமான நிலையத்தில் விமானம் பயணித்த நான்கு வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் அநேக பயணிகள் மரித்துப் போனார்கள்.
ஆகவே நாம் இந்த விமானத்தை ஆண்டவருடைய கையில் ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தமுள்ள எங்கள் பரலோகபிதாவே ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மாலைவேளைக்காக ஸோஸ்தரிக்கிறோம்.
நாங்கள் எல்லோரும் இந்த விமானத்தில் இருக்கிறோம். இந்த விமானம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதாக விமானியின் கையிலே உம்முடைய கரம் இருப்பதாக எண்ணுகிறோம் என்று உருக்கமாக பிரார்த்தித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி மீது விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒரு பயணியைத் தவிர மிகுதி 241 பயணிகளும் உயிரிழந்தனர். அதன்பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டனர்.
அவ்வாறு பயணம் மேற்கொண்டாலும் பல தடவைகள் ஏர் இந்தியா விமானங்களில் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையிலேயே பயணி ஒருவர் தனது பயத்தை பிரார்த்தனை வழியாக தெரியப்படுத்தியுள்ளார்.
ஆண்டவர் நம்மை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் ; ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் பிரார்த்தனை எயார் இந்தியா விமானம் ஒன்றிலிருந்த பயணி ஒருவர், தான் உட்பட விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக பயணிக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தனை செய்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. டுபாய்க்குப் பயணிப்பதற்காக பயணிகள் அனைவரும் எயார் இந்தியா விமானமொன்றில் தயாராக இருந்தனர். அதன்போதே விமானத்திலிருந்த பயணி ஒருவர் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார். அவர் தனது பிரார்த்தனையில் தெரிவிக்கையில், ஏயார் இந்தியா விமானத்தில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு இயந்திரக் கோளாறு ஏற்படுகிறது. இன்றைக்கு நாம் அனைவரும் இந்த விமானத்தில் அமர்ந்திருக்கிறோம். நாம் எல்லோரும் சுகமாக போய் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்க வேண்டும். ஆண்டவர் நம்மை பத்திரமாய் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயத்தோடு தான் இருப்பார்கள். கடந்த நாட்களிலே அகமதாபாத் விமான நிலையத்தில் விமானம் பயணித்த நான்கு வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் அநேக பயணிகள் மரித்துப் போனார்கள்.ஆகவே நாம் இந்த விமானத்தை ஆண்டவருடைய கையில் ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தமுள்ள எங்கள் பரலோகபிதாவே ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மாலைவேளைக்காக ஸோஸ்தரிக்கிறோம். நாங்கள் எல்லோரும் இந்த விமானத்தில் இருக்கிறோம். இந்த விமானம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதாக விமானியின் கையிலே உம்முடைய கரம் இருப்பதாக எண்ணுகிறோம் என்று உருக்கமாக பிரார்த்தித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி மீது விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒரு பயணியைத் தவிர மிகுதி 241 பயணிகளும் உயிரிழந்தனர். அதன்பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டனர். அவ்வாறு பயணம் மேற்கொண்டாலும் பல தடவைகள் ஏர் இந்தியா விமானங்களில் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையிலேயே பயணி ஒருவர் தனது பயத்தை பிரார்த்தனை வழியாக தெரியப்படுத்தியுள்ளார்.