யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் வீதியால் பயணித்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
வரணி மாசேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடிகாமம் பருத்தித்துறை வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வேளை சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திற்கு முன்பாக நின்ற இனந்தெரியாத இளைஞர் குழு ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய இளைஞர் குழு தப்பிச்சென்றுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியால் பயணித்த இளைஞரை தாக்கிய வன்முறைக் கும்பல்; இளைஞர் வைத்தியசாலையில் கும்பலை வலைவீசும் பொலிஸார் யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் வீதியால் பயணித்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.வரணி மாசேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடிகாமம் பருத்தித்துறை வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வேளை சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திற்கு முன்பாக நின்ற இனந்தெரியாத இளைஞர் குழு ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.தாக்குதல் நடத்திய இளைஞர் குழு தப்பிச்சென்றுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.