• May 13 2025

இலங்கையில் அடுத்த மாணவிக்கு நடந்த கொடூரம்; ஆங்கில பாட ஆசிரியர் அதிரடிக் கைது

Chithra / May 13th 2025, 12:52 pm
image

 

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள்   கைது செய்துள்ளனர்.

தெவினுவர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.

இந்த ஆசிரியர் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி நன்றாக ஆங்கிலம் கற்றுக் கொண்டதன் காரணமாக ஆசிரியர் மாணவியுடன் நெருங்கிப் பழகி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சிறுமியின் வாக்கு மூலம் என்பனவற்றின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, மாத்தறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 

இலங்கையில் அடுத்த மாணவிக்கு நடந்த கொடூரம்; ஆங்கில பாட ஆசிரியர் அதிரடிக் கைது  மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள்   கைது செய்துள்ளனர்.தெவினுவர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.இந்த ஆசிரியர் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.மாணவி நன்றாக ஆங்கிலம் கற்றுக் கொண்டதன் காரணமாக ஆசிரியர் மாணவியுடன் நெருங்கிப் பழகி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சிறுமியின் வாக்கு மூலம் என்பனவற்றின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி, மாத்தறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்தோடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement