• Aug 25 2025

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

Aathira / Aug 25th 2025, 9:28 am
image

பொரலஸ்கமுவவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை களுபோவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ - மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நேற்று (24) அதிகாலை நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 25 வயது உடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.  

குறித்த இளைஞன்  அப் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வரும் வழியில்  முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு  தப்பிச் சென்றுள்ளனர். 

இந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு இணங்க,  

துப்பாக்கி சூட்டு  சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதானவர்கள்  தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 20  வயது உடையவர்கள்.

குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு; மூவர் கைது பொரலஸ்கமுவவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை களுபோவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொரலஸ்கமுவ - மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நேற்று (24) அதிகாலை நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 25 வயது உடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.  குறித்த இளைஞன்  அப் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வரும் வழியில்  முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு  தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு இணங்க,  துப்பாக்கி சூட்டு  சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள்  தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 20  வயது உடையவர்கள்.குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement