முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியலை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
'எனது அரசியல் கணிப்பின்படி, இது நமது நாட்டின் அரசியலை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் ஒரு சம்பவமாகவே உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கையுடன் நாம் இணங்கவில்லை என்றாலும், நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவர் இவ்வாறு நடத்தப்படுவது தவறாகும்.
நீதிமன்றமத்தின் உத்தரவை நான் கேள்விக்குள்ளாக்கவில்லை. நீதித்துறை செயல்முறை மற்றும் நடத்தப்பட்ட விசாரணைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் பிணைப்பு என்பன கேள்விக்குறியவையாகக் காணப்படுகின்றன என்பதையே நான் குறிப்பிடுகின்றேன் என திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.
அரசியலை திசை திருப்பவே ரணில் கைது செய்யப்பட்டுள்ளார் - திலித் ஜயவீர குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியலை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.'எனது அரசியல் கணிப்பின்படி, இது நமது நாட்டின் அரசியலை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் ஒரு சம்பவமாகவே உள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கையுடன் நாம் இணங்கவில்லை என்றாலும், நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவர் இவ்வாறு நடத்தப்படுவது தவறாகும்.நீதிமன்றமத்தின் உத்தரவை நான் கேள்விக்குள்ளாக்கவில்லை. நீதித்துறை செயல்முறை மற்றும் நடத்தப்பட்ட விசாரணைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் பிணைப்பு என்பன கேள்விக்குறியவையாகக் காணப்படுகின்றன என்பதையே நான் குறிப்பிடுகின்றேன் என திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.