• Aug 24 2025

நீதிபதி ஒருவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனம்

Chithra / Aug 24th 2025, 9:24 am
image

 

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

நீதித்துறை சேவை ஆணையகத்தின் தலைவராக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 

முன்னாள் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவின் பதவிக் காலத்தில், குறித்த சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதி மீது 477 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீதிபதி, தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சமர்ப்பித்த பதில்களை அடுத்தே, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


நீதிபதி ஒருவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனம்  மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை சேவை ஆணையகத்தின் தலைவராக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவின் பதவிக் காலத்தில், குறித்த சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதி மீது 477 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீதிபதி, தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சமர்ப்பித்த பதில்களை அடுத்தே, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement